சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும் - பெ.மணியரசன்


சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும் - பெ.மணியரசன்
x
தினத்தந்தி 11 April 2018 3:00 PM IST (Updated: 11 April 2018 3:00 PM IST)
t-max-icont-min-icon

சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும் என பெ.மணியரசன் கூறினார். #Seeman #IPLProtest

சென்னை

தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை சார்பில் திரைப்பட இயக்குநர்கள்  பாரதிராஜா, சீமான்,  கவுதமன் அமீர், மற்றும்   கருணாஸ்,   தமிமூன் அன்சாரி, தனியரசு  கூட்டாக பேட்டி அளித்தனர். 

சீமான் கூறியதாவது:-

காவலர்களை நான் தாக்கவில்லை; விலக்கியே விட்டேன் யாரையும் தாக்க வேண்டும் என்பது எனது நோக்கமல்ல. எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ரஜினிக்கு வன்முறையாக தெரியவில்லையா? ஆந்திராவில் நடந்த கலவரத்தை, தமிழர்கள் மீதான தாக்குதலை ஏன் கண்டிக்கவில்லை . எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது ரஜினிக்கு வன்முறையாக தெரியவில்லையா? 

கர்நாடகத்தில் பாஜக ஆட்சியின் போதும் தமிழகத்திற்கு முறையாக நீர் திறக்கவில்லை. தமிழ்நட்டிற்கென கொடி கொண்டு வந்தது தேசிய விரோதமல்ல கர்நாடகத்தில் தனிக்கொடி மூலம் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என கூறினார்.

பெ.மணியரசன்  கூறியதாவது:- 

சீமான் உள்ளிட்டோர் மீதான வழக்கு, பொய் வழக்கு; அதனை திரும்பப் பெற வேண்டும். சீமானை கைது செய்தால் எங்களையும் கைது செய்ய வேண்டும் என கூறினார்.

Next Story