பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு ;சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது
பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பும் கொடி போரட்டம்ந் அடத்திய சீமான் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி, பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர் கைது செய்யப்பட்டனர். #DefenceExpo2018
சென்னை
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்.
பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது.
கறுப்பு கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா, வெற்றிமாறன், அமீர், உள்ளிட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன், மணியரசன், தமிமுன் அன்சாரி உள்ளிட்டவர்கள் கைது. இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் விமானநிலைய வளாகத்துக்கு முன் கறுப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர் அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை: பிரதமர் மோடியின் தமிழக வருகையை கண்டித்து புதுக்கோட்டை மேலராஜா வீதி , கீழராஜா வீதி, அண்ணா சிலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் வணிகர்கள் கருப்புக்கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
தேனி: தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரியகுளம் பகுதியில் உள்ள திமுகவினர் வீடுகளில் கருப்புக்கொடி கட்டியும் கருப்பு சட்டை அணிந்தும் போராட்டம் நடத்தினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும், பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரியலூரில் தனியார் செல்போன் டவரில் 4 இளைஞர்கள் கையில் கறுப்பு கொடி மற்றும் திமுக கொடியுன் போராட்டம் நடத்தினர்.
கிருஷ்ணகிரி: ஓசூரில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம்
சிவகங்கை மாவட்டம் முழுவதும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், தங்களது வீடுகளில் கறுப்புக்கொடி கட்டி பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்
விழுப்புரம்: செஞ்சியில் பிரதமர் மோடி வருகையை கண்டித்து திமுகவினர் கருப்பு சட்டை அணிந்து, கருப்பு பலூன்களை வானில் பறக்க விட்டு சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி: ஓசூரில் திமுக சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் தி.மு.கவினர் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர்.
Related Tags :
Next Story