அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் - மோடி பேச்சு


அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் -  மோடி பேச்சு
x
தினத்தந்தி 12 April 2018 11:38 AM IST (Updated: 12 April 2018 11:38 AM IST)
t-max-icont-min-icon

அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என ராணுவ தளவாட கண்காட்சியை தொடங்கிவைத்து பிரதமர் நரேந்திர மோடி பேசினார். #NarendraModi #DefenceExpo2018

சென்னை

தமிழ்த்தாய் வாழ்த்துடன் ராணுவ கண்டகாட்சி தொடங்கியது. ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். பின்னர் அவர் உரையாற்றினார்.  

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

விழாவில் "காலை வணக்கம்" என தமிழில் கூறி பேச்சை தொடங்கினார். வரலாற்று சிறப்பு மிக்க ஊரில் ராணுவ தளவாட கண்காட்சி நடக்கிறது.
தளவாடங்களின் தேவை மற்றும் முக்கியத்துவம் பற்றி ராணுவம் நன்கு அறிந்திருக்கிறது .உலகிற்கு அஹிம்சையை போதித்த நாடு நமது நாடாகும் 

2100க்கும் மேற்பட்ட உள்நாட்டு நிறுவனங்கள் 125 வெளிநாட்டு நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்றுள்ளன சோழர்கள் ஆண்ட பகுதியில் நீங்கள் இந்த அளவுக்கு கூடியிருப்பதை கண்டு மகிழ்ச்சியடைகிறேன்.

முதன்முறை நான் ராணுவ தளவாட கண்காட்சிக்கு வருகை தந்ததற்கு மகிழ்ச்சி அடைகிறேன். முதன் முறையாக இந்திய நாடுகளில் தயார் செய்யப்பட்ட ராணுவ தளவாட பொருட்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது.இந்தியா முதல்முறையாக ராணுவ தளவாடங்கள் உற்பத்தியில் ஈடுபட்டு சாதனை படைத்து வருகிறது 

போர் தொடுத்து பிற நாடுகளை வெல்வது விட, மனங்களை வெல்ல வேண்டும் என்ற கொள்கையில் இந்தியா  நம்பிக்கை வைத்துள்ளது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

சிறு குறு நிறுவனங்கள் ராணுவ தளவாட உற்பத்தியில் தங்களது பங்களிப்பை செலுத்த வேண்டும் . அமைதியை விரும்பும் இந்தியா எல்லையில் நாட்டு மக்களுக்காக தனது பங்களிப்பை அளிக்கிறது. 

சிறிய அளவில் தொடங்கிய ராணுவ தளவாட உற்பத்தி, தற்போது இமாலய வளர்ச்சி அடைந்துள்ளது. ராணுவ தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தொடங்கியது நமக்கு பெருமை.  பாதுகாப்புத் துறையில் முதலீடு செய்ய வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி வழித்தடங்கள் அமைய உள்ளது.  ராணுவ தளவாட உற்பத்தியில் பெரிய மற்றும் சிறிய நிறுவனங்கள் 200% வளர்ச்சி  அடைந்துள்ளன. அப்துல் கலாமின் கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

"தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத்து ஊறும் அறிவு" என திருக்குறள் கூறி பேச்சை நிறைவு செய்தார்.

Next Story