மோடி வருகைக்கு எதிர்ப்பு: உலக அளவில் டுவிட்டரில் ட்ரெண்டான GoBackModi
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது அந்த ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்தது. #DefenceExpo2018 #NarendraModi
பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி, சென்னை விமானநிலையம் வந்திறங்கினார்.
பிரதமர் மோடி, விமான நிலையத்தில் வந்திறங்கிய சமயத்தில் அந்தப் பகுதியைச் சுற்றி கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பரங்கிமலைப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனைய வருகை பகுதியில் கருப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்திய இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், ராம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் அருகே போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் கைது.
பிரதமர் மோடி, 10 மணிக்கு முன்னதாக விமானநிலையம் வந்தடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், விமானநிலையத்தைச் சுற்றிய பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விமானநிலைய வரவேற்புக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றார் பிரதமர். அங்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் ராணுவ கண்டகாட்சி தொடங்கியது. ராணுவ தளவாட கண்காட்சியை அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கிறார் பிரதமர்.
ராணுவ தளவாட கண்காட்சி விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்று உள்ளனர்.
மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackModi என்ற ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு இருந்தது. அந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.
மதியம் 12 மணிக்கு பிறகு #GoBackModi ஹேஷ்டேக் உலக அளவில் டுவிட்டர் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்தது.
Related Tags :
Next Story