அரக்கோணத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் 5 நாட்கள் மாற்றம்


அரக்கோணத்தில் பராமரிப்பு பணி: ரெயில் சேவையில் 5 நாட்கள் மாற்றம்
x
தினத்தந்தி 19 April 2018 10:45 PM GMT (Updated: 19 April 2018 9:25 PM GMT)

அரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நாளை முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை, 

அரக்கோணத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நாளை முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

21-ந்தேதி

சென்னை மூர்மார்க்கெட்-திருத்தணி 10, 11.45 மணி, வேளச்சேரி-திருத்தணி 11.20 மணி மின்சார ரெயில்கள் அரக்கோணம் வரை மட்டுமே செல்லும். திருத்தணி-மூர்மார்க்கெட் 1.15, 2.30 மணி ரெயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படும். மூர்மார்க்கெட்-திருப்பதி காலை 9.50 மணி ரெயில் சித்தேரி வழியாக செல்லும். சென்டிரல்- திருப்பதி 2.15 மணி திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053) ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி-சென்டிரல் 10 மணி எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) திருத்தணி வரை மட்டுமே செல்லும்.

சென்டிரல்-மும்பை (மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ், 11042), சென்டிரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679), சென்டிரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607) ஆகியவை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

22-ந்தேதி

மூர்மார்க்கெட்-திருத்தணி 7.05, 10, 11.45 மணி, கடற் கரை-திருத்தணி 12.10 மணி ரெயில்கள் அரக்கோணம் வரையிலும், திருப்பதி-மூர்மார்க்கெட் விரைவு ரெயில் பொன்பாடி வரையிலும் இயக்கப்படும். திருத்தணி-மூர்மார்க்கெட் 9.40, 1.15, 2.30 மணி ரெயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

மூர்மார்க்கெட்-திருப்பதி 9.50 மணி ரெயில் சித்தேரி வழியாக செல்லும். சென்டிரல்-திருப்பதி 2.15 மணி திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053) ரத்துசெய்யப்படுகிறது. சென்டிரல்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் (11042) 1½ மணி நேரம் தாமதமாக புறப்படும்.

23-ந்தேதி

மூர்மார்க்கெட்-திருத்தணி 10, 11.45 மணி, வேளச்சேரி-திருத்தணி 11.20 மணி ரெயில்கள் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். திருத்தணி-மூர்மார்க்கெட் 1.15, 2.30 மணி ரெயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படும். மூர்மார்க்கெட்- திருப்பதி 9.50 மணி ரெயில் சித்தேரி வழியாக செல்லும்.

சென்டிரல்-திருப்பதி 2.15 மணி திருப்பதி எக்ஸ்பிரஸ் (16053) ரத்து செய்யப்படுகிறது. திருப்பதி-சென்டிரல் காலை 10 மணி எக்ஸ்பிரஸ் ரெயில் (16054) திருத்தணி வரை மட்டுமே செல்லும்.

சென்டிரல்-மும்பை சி.எஸ். எம்.டி. எக்ஸ்பிரஸ் (11042), சென்டிரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679), சென்டிரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607) ஆகியவை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

24-ந்தேதி

மூர்மார்க்கெட்-திருத்தணி 10, 11.45 மணி ரெயில்கள் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். திருத்தணி-மூர்மார்க்கெட் 1.15, 2.30 மணி ரெயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

பெங்களூரு-சென்டிரல் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவை-சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகியவை காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி, அரக்கோணம் வழியாக செல்லும்.

சென்டிரல்-மும்பை சி.எஸ். எம்.டி. எக்ஸ்பிரஸ் (11042), சென்டிரல்-கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (12679), சென்டிரல்-பெங்களூரு லால்பாக் எக்ஸ்பிரஸ் (12607), பெங்களூரு எக்ஸ்பிரஸ் (12609) ஆகியவை ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும்.

25-ந்தேதி

மூர்மார்க்கெட்-திருத்தணி 10, 11.45 மணி, வேளச்சேரி- திருத்தணி 11.20 மணி ரெயில் கள் அரக்கோணம் வரை மட்டுமே இயக்கப்படும். திருத்தணி-மூர்மார்க்கெட் 1.15, 2.30 மணி ரெயில்கள் அரக்கோணத்தில் இருந்து புறப்படும்.

பெங்களூரு-சென்டிரல் லால்பாக் எக்ஸ்பிரஸ், கோவை-சென்டிரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகியவை காட்பாடி, மேல்பாக்கம், திருத்தணி, அரக்கோணம் வழியாக செல்லும்.

சென்டிரலில் இருந்து மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ், கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ், பெங்களூரு எக்ஸ்பிரஸ், லால்பாக் எக்ஸ்பிரஸ், வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகியவை ஒரு மணி நேரமும், சாய்நகர் ஷீரடி எக்ஸ்பிரஸ் 2 மணி 20 நிமிடங்களும் தாமதமாக புறப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story