ரூ.1,122 கோடியே 84 லட்சத்தில் 45 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்


ரூ.1,122 கோடியே 84 லட்சத்தில் 45 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 20 April 2018 10:45 PM GMT (Updated: 20 April 2018 7:37 PM GMT)

தமிழகத்தில் ரூ.1,122 கோடியே 84 லட்சம் மதிப்பீட்டில் 45 துணை மின் நிலையங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மின்பாதையில் ஏற்படுகிற மின் இழப்பையும், மின்பராமரிப்பு செலவுகளையும் குறைத்து சரியான மின் அழுத்தத்துடன் சீரான மின்சாரம் வழங்க புதிய மற்றும் தரம் உயர்த்தப்பட்ட துணை மின் நிலையங்களை அரசு அமைத்து வருகிறது.

அந்த வகையில், ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தில் 13 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 110/22 கி.வோ. துணை மின் நிலையத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

மேலும், சென்னை சின்மயா நகர், கோவை மாவட்டம் சமத்தூர், பாப்பநாயக்கன் பாளையம், எம்.ஜி.புதூர், இரும்பொறை, கருமத்தம்பட்டி மற்றும் வடவள்ளி, கடலூர் மாவட்டம் கொட்டாரம் மற்றும் மதுராந்தகநல்லூர்.

திண்டுக்கல் மாவட்டம் லட்சுமணபட்டி, தர்மபுரி, ஈரோடு மாவட்டம் குள்ளம்பாளையம், மாக்கிணாம்கோம்பை, காஞ்சீபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர், பிள்ளைபாக்கம், ஸ்ரீராம் பிராப்பர்டீஸ்.

மதுரை மாவட்டம் இடையபட்டி, கொண்டையம்பட்டி மற்றும் பனையூர், திருச்சி மாவட்டம் ஜம்புநாதபுரம், வாழவந்தான் கோட்டை, திருச்சி கோர்ட்டு வளாகம், முசிறி, பண்ணாங்கொம்பு, தஞ்சாவூர் மாவட்டம் புதூர் மற்றும் தொண்டராம்பட்டு கிழக்கு,

திருப்பூர் மாவட்டம் அனிக்கடவு, திருவாரூர் மாவட்டம் நீலக்குடி, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மற்றும் வெலக்கல்நத்தம், அரியலூர் மாவட்டம் ஆண்டி மடம், சாத்தமங்கலம், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி, செட்டிக்குறிச்சி, விருதுநகர் மாவட்டம் சவாசபுரம், நல்லமநாயக்கன்பட்டி, வத்திரா யிருப்பு, படிக்காசுவைத்தான்பட்டி.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு, கரூர் மாவட்டம் கொசூர், கிருஷ்ணகிரி மாவட்டம் காமன்தொட்டி, நீலகிரி மாவட்டம் கெரடாமட்டம், திருவண்ணாமலை மாவட்டம் அரையாளம், மேல்மா என மொத்தம் ஆயிரத்து 122 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 45 துணை மின் நிலையங்களை எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் பி.தங்கமணி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், எரிசக்தித் துறை முதன்மைச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் விக்ரம் கபூர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story