அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வந்தார்


அண்ணா அறிவாலயத்துக்கு கருணாநிதி வந்தார்
x
தினத்தந்தி 20 April 2018 7:42 PM GMT (Updated: 2018-04-21T01:12:18+05:30)

தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். #Karunanidhi

சென்னை,

வயது முதிர்வின் காரணமாக வீட்டிலேயே தங்கி ஓய்வு எடுத்து வரும் தி.மு.க தலைவர் கருணாநிதி ஏற்கனவே 2 முறை சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு வந்து சென்று உள்ளார். இந்த நிலையில் 3-வது முறையாக நேற்று இரவு 8 மணி அளவில் அண்ணா அறிவாலயத்துக்கு அவர் வந்தார்.

சக்கர நாற்காலியில் இருந்தபடி வந்த அவரை, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன், முதன்மை செயலாளார் துரைமுருகன், எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் வரவேற்று, அழைத்துச் சென்றனர். நேராக தனது அறைக்கு சென்ற கருணாநிதி, சற்று நேரம் அங்கேயே இருந்தார்.

பின்னர், 8.35 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் இல்லத்துக்கு புறப்பட்டு சென்றார்.

Next Story