நிர்மலாதேவியின் வக்கீல் விலகல்


நிர்மலாதேவியின் வக்கீல் விலகல்
x
தினத்தந்தி 20 April 2018 8:34 PM GMT (Updated: 20 April 2018 8:34 PM GMT)

நிர்மலாதேவிக்கு ஆதரவாக வாதாடப்போவதில்லை என்று வக்கீல் பாலசுப்பிரமணியன் திடீரென்று அறிவித்து இருக்கிறார்.

அருப்புக்கோட்டை,

மாணவிகளுக்கு பாலியல் வலை விரித்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி கைதாகி மதுரை சிறையில் அடைக்கப்பட்டு இருந்தபோது அவரை அருப்புக்கோட்டை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த வக்கீல் பாலசுப்பிரமணியன் சந்தித்துப் பேசினார். பின்னர், நிர்மலாதேவியின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்றும், அவருக்கு ஆதரவாக வாதாட இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்தநிலையில் அவர் நிர்மலாதேவிக்கு ஆதரவாக வாதாடப்போவதில்லை என்று திடீரென்று அறிவித்து இருக்கிறார். தனது சொந்த விருப்பத்தின் பேரில் விலகுவதாகவும் இதில் மிரட்டலோ எந்த நிர்ப்பந்தமோ இல்லை என்றும் நேற்று அவர் தெரிவித்தார். தானாகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

Next Story