மதுரையில் அரிசி வணிகரின் வீட்டின் பூட்டை உடைத்து 130 சவரன் நகை கொள்ளை


மதுரையில் அரிசி வணிகரின் வீட்டின் பூட்டை உடைத்து 130 சவரன் நகை கொள்ளை
x
தினத்தந்தி 22 April 2018 6:40 AM GMT (Updated: 22 April 2018 6:40 AM GMT)

மதுரையில் அரிசி வணிகம் செய்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து 130 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு உள்ளன.

மதுரை,

மதுரை நகரில் ஆரப்பாளையம் அருகே அரசரடி பகுதியை சேர்ந்தவர் ஜெகன்.  இவர் அரிசி வணிகம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 130 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றுள்ளனர்.  வீட்டில் இருந்து ரூ.2 லட்சம் பணமும் திருடு போயுள்ளது.

இதுபற்றி ஜெகன் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.  இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story