ஹெல்மெட் கட்டாயம்: மக்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்காதது வேதனை அளிக்கிறது-நாராயண சாமி


ஹெல்மெட் கட்டாயம்: மக்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்காதது வேதனை அளிக்கிறது-நாராயண சாமி
x
தினத்தந்தி 23 April 2018 12:48 PM IST (Updated: 23 April 2018 12:48 PM IST)
t-max-icont-min-icon

புதுச்சோியில் நடைப்பெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு விழாவில் ஹெல்மெட் அணியாதது வேதனை அளிக்கிறது என்றாா் நாராயணசாமி. #Narayanasamy

புதுச்சோி, 

புதுச்சோியில்  நடைப்பெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு வார விழாவில் முதல்வா் நாராயணசாமி கலந்து கொண்டாா். பின்னா் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் அணிவதன் பயன்கள் கூறித்தும்  உரையாற்றினாா்.

மேலும், வாகன ஓட்டிகள் அனைவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிந்து தான் வாகனங்களை ஓட்ட வேண்டும் என்றும் , அணியாதவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சாித்தாா். ஆனால் ஹெல்மெட் கட்டாயம் என்ற வீதிக்கு மக்கள் யாரும் ஒத்துழைப்பு கொடுக்காதது பெரும் வேதனை அளிக்க கூடியதாக உள்ளது.

இந்நிலையில் சாலை விபத்துகளை தடுக்க ஹெல்மெட்  அணிய வேண்டும் என்ற முயற்சி தோல்வியை தான் தழுவியுள்ளது என்றும் தொிவித்தாா். இருப்பினும் கடந்தாண்டை விட தற்போது 15 சதவீத விபத்துகள் குறைந்து கூறிப்பிடதக்கது இவ்வாறு அவர் கூறினார்.

Next Story