அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாது: ரஜினிகாந்த் பேட்டி
அரசியலில் விமர்சனம் என்பதை தவிர்க்க முடியாது என்று சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காவல்துறை மீது எப்போது தாக்குதல் நடத்தினாலும் கண்டிக்கத்தக்கது. அரசியலில் விமர்சனம் என்பது தவிர்க்க முடியாதது.
கட்சி தொடங்குவது உறுதி, கட்சி தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்கு பின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும். பெண் பத்திரிகையாளர் விவகாரத்தில் எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்” என்றார்.
மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று இரவு அமெரிக்கா செல்ல உள்ளார்.10 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் சென்னை திரும்புவார் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story