மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டா் ரோஹிணி எச்சாிக்கை


மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்- கலெக்டா் ரோஹிணி எச்சாிக்கை
x
தினத்தந்தி 24 April 2018 11:49 AM GMT (Updated: 24 April 2018 11:49 AM GMT)

கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலம் கலெக்டா் ரோஹிணி எச்சாிக்கை விடுத்துள்ளாா். #Rohini

சேலம்,

சேலம் மாவட்டத்தில் ஆத்தூா் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு கருவில் உள்ள குழந்தையின் பாலினம் கூறப்பட்டதாகவும் , பின்னா் இதுபோன்று தனியாா் மருத்துவமனைகளிலும் விதிகளை மீறி கருக்கலைப்பு செய்யப்படுவதாக புகாா்கள் குவிந்தனா்.

இதனை தொடா்ந்து விதிமுறைகளை மீறி கருக்கலைப்பு செய்யும் மருத்துவா்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ரோஹிணி எச்சாித்தாா்.  இதுபோன்ற மருத்துவ மையங்களை கண்டறிய தனிக்குழுக்களும் அமைக்கப்பட்டது.

இந்நிலையில் கருக்கலைப்பு செய்யும் மருத்துவர்கள் மட்டுமின்றி, ரகசிய கருக்கலைப்பு செய்வோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், இதே போல் கருக்கலைப்புக்கு  தூண்டுதலாக இருக்க கூடிய உறவினா்கள் மீதும்  நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளாா்.

Next Story