கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் -மு.க. அழகிரி


கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் -மு.க. அழகிரி
x
தினத்தந்தி 26 April 2018 9:26 AM GMT (Updated: 26 April 2018 9:26 AM GMT)

கருணாநிதி அழைத்தால் மீண்டும் திமுகவில் இணைவேன் என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி கூறி உள்ளார். #MKAlagiri #DMK

சென்னை

மு.க. அழகிரியின் பேரனின் முதலாவது பிறந்த நாள் சென்னையில் கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற அழகிரி, கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம், கருணாநிதி உடல்நிலை நன்றாக இருக்கிறது என்றார். பின்னர் சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களை சந்தித்தார்.

இச்சந்திப்பின் போது நீங்கள் மீண்டும் திமுகவில் இணைவீர்களா? என ஒரு செய்தியாளர் கேள்வி எழுப்பி முடிப்பதற்குள், கருணாநிதி அழைத்தால் திமுகவில் சேருவேன் என வேகமாக பதிலளித்தார் மு.க.அழகிரி. 

2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார் மு.க.அழகிரி. அதன் பின் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்தாலும் ஸ்டாலினை தொடர்ந்து விமர்சித்து வருகிறார்  என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story