காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன என மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டிஉள்ளார். #MKStalin
சென்னை,
காவிரி மேலாண்மை வாரிய விவகாரம் மற்றும் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க இன்று திமுக தரப்பில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இன்று சுப்ரீம் கோர்ட்டில் காலை காவிரி விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்ற போது மத்திய அரசு, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. இந்நிலையில் மாலையில் திட்டமிட்டபடி திமுக தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின், நீட் தேர்வு எழுத மாணவர்களை அழைத்துச்சென்ற பெற்றோர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்தும், ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை கைது செய்ததை கண்டித்தும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார். காவிரி விவகாரம் தொடர்பாக மே 15-ம் தேதி மீண்டும் திமுக சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும். காவிரி வழக்கில் மே 14-ம் தேதி நல்ல முடிவு வரவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என குறிப்பிட்டார்.
காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன எனவும் குற்றம் சாட்டினார்.
கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Related Tags :
Next Story