மாநில செய்திகள்

வெளிநாட்டு சொத்துகள் எதையும் மறைக்கவில்லை-ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஆடிட்டர்கள் + "||" + No foreign property has been hidden of P. Chidambaram Family Auditors

வெளிநாட்டு சொத்துகள் எதையும் மறைக்கவில்லை-ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஆடிட்டர்கள்

வெளிநாட்டு சொத்துகள் எதையும் மறைக்கவில்லை-ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஆடிட்டர்கள்
வெளிநாட்டு சொத்துகள் எதையும் மறைக்கவில்லை என ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஆடிட்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை,

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மத்திய மந்திரியாக இருந்தவர் ப.சிதம்பரம். இவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் சொத்துகள் வாங்கியுள்ளதாகவும், இந்த சொத்துகள் வாங்கிய விவரங்களை நளினி சிதம்பரம் உள்பட 3 பேரும், தங்களது வருமான வரிக்கணக்கில் காட்டவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2015-ம் ஆண்டு கருப்பு பண தடுப்புச்சட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் மீது வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. அதாவது, இங்கிலாந்து நாட்டில், ரூ.5.37 கோடி மற்றும் ரூ.80 லட்சம் மதிப்பு கொண்ட 2 சொத்துகளும், அமெரிக்காவில் ரூ.3.28 கோடி மதிப்புள்ள சொத்தும் வாங்கப்பட்டுள்ளதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்டு அவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீசு அனுப்பியது.

இதை எதிர்த்து நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.சிவஞானம், தள்ளுபடி செய்து கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டார். இதை எதிர்த்து 3 பேரும் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் வி.பாரதிதாசன், என்.சேஷசாயி ஆகியோர் கடந்த 3-ந்தேதி விசாரித்தனர். அப்போது, கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் எதிராக வருமான வரித்துறை விசாரணை நடத்தலாம். அதேநேரம், கருப்பு பண தடை சட்டத்தின் கீழோ அல்லது வருமானவரிச் சட்டத்தின் கீழோ நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கும்போது, இந்த வழக்கு நிலுவையில் உள்ளதை நினைவில் கொள்ளவேண்டும். இந்த வழக்கிற்கு வருமான வரித்துறை முதன்மை இயக்குனர், வருகிற ஜூன் 5-ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், கருப்பு பண தடுப்புச்சட்டத்தின் கீழ் நளினி சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், ஸ்ரீநிதி ஆகியோருக்கு எதிராக புகார் மனுவை சென்னையில் உள்ள சிறப்பு கோர்ட்டில், வருமான வரித்துறை தாக்கல் செய்துள்ளது. இந்த புகார் மனுவை சிறப்பு கோர்ட்டு பரிசீலித்து ஏற்றுக்கொண்டு பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பும் என்று கூறப்படுகிறது.

வருமானவரி தாக்கலில் வெளிநாட்டு சொத்துகளை மறைத்ததாக வருமானவரித்துறை கூறியது தவறு; வெளிநாட்டு சொத்துகள் எதையும் மறைக்கவில்லை. வருமான வரித்துறையின் புகார் குறித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என  ப.சிதம்பரம் குடும்பத்தினரின் ஆடிட்டர்கள் தெரிவித்து உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு: 'தெரிந்தே விதிகளை மீறினார்'- சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை
ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் தெரிந்தே முன்னாள் மத்திய அமைஅச்சர் சிதம்பரம் விதிகளை மீறினார் என சிபிஐ குற்றப்பத்திரிகையில் தெரிவித்து உள்ளது.
2. ராகுல் அமைத்த குழுவில் ஒரே தமிழர் ப.சிதம்பரம்
வரும் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. #Rahul #Chidambaram
3. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி இருந்தது- ப.சிதம்பரம்
உண்மை வெற்றி பெறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தொடர் தரவு, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் சிறந்த பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது என முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறி உள்ளார்.
4. இந்தியாவில் ஓராண்டில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சியில்லாமல் வளர்கின்றன - முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம்
இந்தியாவில் ஓராண்டில் 30 லட்சம் குழந்தைகள் முழு வளர்ச்சியில்லாமல் வளர்கின்றன என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
5. சிங்கம்புணரி அருகே கிராமசபை கூட்டத்தில் ப.சிதம்பரம் பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூர் கிராமத்தில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் பங்கேற்றார்.