ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு


ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் - பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவிப்பு
x
தினத்தந்தி 12 May 2018 5:01 PM IST (Updated: 12 May 2018 5:01 PM IST)
t-max-icont-min-icon

ஜூன் 1-ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும்" என்று பள்ளி கல்விதுறை இயக்குனர் இளங்கோவன் அறிவித்துள்ளார். #SchoolsReopen

சென்னை, 

தமிழகத்தில் 12, 11 மற்றும் 10-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் பொதுத்தேர்வுகள் எழுதினர். அதன்பின் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அதேபோல் மற்ற வகுப்பு மாணவ- மாணவிகளுக்கும் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது.

பொதுவிடுமுறை முடிந்து ஜூன் 7-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஜூன் 1-ந்தேதியே அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்பட அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் இளங்கோ அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுத்தொடர்பாக அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Story