கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும்-தமிழிசை சவுந்தரராஜன்


கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும்-தமிழிசை சவுந்தரராஜன்
x
தினத்தந்தி 15 May 2018 11:59 AM IST (Updated: 15 May 2018 11:59 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும். என தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார். #KarnatakaElection2018

பெங்களூரு

கர்நாடக தேர்தலில்  11.53  நிலவரப்படி  பாரதீய ஜனதா  113  இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 67 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 40 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

பாரதீய ஜனதா வெற்றி குறித்து தமிழக பாரதீய ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

பாஜக மீதும், மோடி மீதும் கர்நாடக மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியின் பிரசாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை. கருத்துக்கணிப்புகளை  தவிடுபொடியாக்கி தனிப் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியமைக்கிறது. 

கர்நாடகாவில் பாஜக வெற்றியால் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும்.

பிரதமர் மோடிக்கு இந்த வெற்றி சமர்ப்பணம். காங்கிரஸ் எவ்வளவுதான் பிரித்தாளும் சூழ்ச்சி செய்தாலும் ஆளும் மாநிலத்தை இழந்துள்ளார்கள் 

ஆட்சி செய்த மாநிலத்தை இழந்த காங்கிரஸ், இனி வேறு எங்கும் ஆட்சியமைக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story