மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம் + "||" + 30 police superintendents changed across Tamil Nadu

தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்

தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றம்
தமிழகம் முழுவதும் 30 போலீஸ் சூப்பிரண்டுகள் மாற்றப்பட்டனர். சென்னையில் புதிய துணை கமிஷனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை,

தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறி இருப்பதாவது:-

1. எம்.ஸ்ரீஅபினவ்-தக்கலை உதவி சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை கிழக்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

2. என்.எஸ்.நிஷா-சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்றுள்ளார். திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

3. இ.சாய்சரண் தேஜஸ்வி- குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராக பொறுப்பு ஏற்கிறார்.

4. ரவளி பிரியா கந்தபுனேரி- திருவண்ணாமலை டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

5. எஸ்.செல்வநாகரத்தினம்- தூத்துக்குடி உதவி போலீஸ் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

6. கே.பிரபாகர்- ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக உள்ள இவர் பதவி உயர்வு பெற்று, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறை துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

7. எஸ்.எஸ்.மகேஸ்வரன்- திண்டுக்கல் அமலாக்கப்பிரிவு கூடுதல் சூப்பிரண்டான இவர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராஜபாளையம் சிறப்புக் காவல்படை 11-வது பட்டாலியன் கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

8. வி.ஷியாமளாதேவி- பெண்களுக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணை கூடுதல் கமிஷனராக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பணியாற்றினார். பதவி உயர்வு பெற்று சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

9. சி.ஷியாமளாதேவி- சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனரான இவர், மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

10. பர்வேஸ்குமார்- சென்னை திருவல்லிக்கேணி துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சி.பி.சி.ஐ.டி. சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

11. எஸ்.சாந்தி- மத்திய சென்னை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டான இவர், தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

12. பி.சாமுண்டீஸ்வரி- தமிழ்நாடு போலீஸ் அகாடமி சூப்பிரண்டான இவர், சென்னை சி.பி.சி.ஐ.டி. சைபர் கிரைம் பிரிவு சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

13. ஜி.ஷாசங்க் சாய்- சென்னை வண்ணாரப்பேட்டை துணை கமிஷனரான இவர், அடையாருக்கு மாற்றப்பட்டுள்ளார்.

14. ரோகித் நாதன் ராஜகோபால்- சென்னை அடையாறு துணை கமிஷனரான இவர், சென்னை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

15. ஜார்ஜி ஜார்ஜ்- சென்னை ரெயில்வே சூப்பிரண்டான இவர், சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

16. பி.ராஜன்- சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

17. ஜி.ஸ்டாலின்- சென்னை ஒருங்கிணைந்த குற்றப்புலனாய்வு பிரிவு சூப்பிரண்டான இவர், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

18. ஜி.சம்பத்குமார்- காத்திருப்போர் பட்டியலில் இருந்த இவர், சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக நியமிக்கப்பட்டுள்ளார்.

19. பி.கண்ணம்மாள்- சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக உதவி ஐ.ஜி.யாக பணியாற்றிய இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

20. எச்.ஜெயலட்சுமி- லஞ்ச ஒழிப்புத்துறை மத்திய சரக சூப்பிரண்டான இவர், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கு சரக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

21. சரோஜ்குமார் தாக்கூர்- லஞ்ச ஒழிப்புத்துறை தெற்கு சரக சூப்பிரண்டான இவர், திருச்சி ரெயில்வே சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

22. ஆன்னிவிஜயா- திருச்சி ரெயில்வே சூப்பிரண்டான இவர், சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டாக மாற்றப்பட்டுள்ளார்.

23. என்.தேவராணி- சென்னை போதை ஒழிப்பு புலனாய்வுப்பிரிவு சூப்பிரண்டான இவர், சென்னை மெட்ரோ ரெயில் தலைமை பாதுகாப்பு அதிகாரியாக பதவி ஏற்பார்.

24. இ.எஸ்.உமா- திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு, சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

25. ஏ.கயல்விழி- திருப்பூர் நகர போக்குவரத்து மற்றும் குற்றப்பிரிவு சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக பணியாற்றும் இவர், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பொறுப்பு ஏற்பார்.

26. எஸ்.சக்திகணேசன்- திருச்சி நகர சட்டம்-ஒழுங்கு துணை கமிஷனராக உள்ள இவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

27. டாக்டர் ஆர்.சிவகுமார்- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டான இவர், சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

28. ஐ.ஈஸ்வரன்- சென்னை மேற்கு போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக உள்ள இவர், அம்பத்தூர் துணை கமிஷனராக பதவி ஏற்பார்.

29. எஸ்.சர்வேஷ் ராஜ்- சென்னை அம்பத்தூர் துணை கமிஷனராக பணியாற்றும் இவர், சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையக சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார்.

30. ஆர்.அந்தோணி ஜான்சன் ஜெயபால்- சென்னை ஆவடி வீராபுரம் சிறப்பு காவல்படை 3-வது பட்டாலியன் கமாண்டராக பணிபுரியும் இவர், சென்னை 2-வது பட்டாலியன் சிறப்பு காவல்படை கமாண்டராக மாற்றப்பட்டுள்ளார்.

இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. வருகிற 20, 27-ந்தேதிகளில் கரூர் மார்க்க ரெயில் சேவையில் மாற்றம்
கரூர் மார்க்க ரெயில் சேவையில் வருகிற 20, 27-ந் தேதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
2. இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்சார ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.