மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்புக் கொடி காட்டிய புகாரில் 12 பேருக்கு முன்ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை


மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்புக் கொடி காட்டிய புகாரில் 12 பேருக்கு முன்ஜாமின் - உயர்நீதிமன்ற மதுரை கிளை
x
தினத்தந்தி 18 May 2018 4:19 PM IST (Updated: 18 May 2018 4:19 PM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கருப்புக் கொடி காட்டிய புகாரில் 12 பேருக்கு முன்ஜாமின் வழங்கியது மதுரை உயா்நீதிமன்றம். #HighCourt #NirmalaSeetharaman

ராமநாதபுரம்,

ராமநாதபுரத்தில் மே 12ம் தேதி அன்று காவிரி விவகாரத்திற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக திமுகவினா் கருப்புக்கொடி காட்டினா். பின்னா் இந்த கருப்புக்கொடி காட்டிய விவகாரம் தொடா்பாக பாஜக பிரமுகா் கேசவன், தி.மு.கவை சோ்ந்த 12 போ் மீது புகார் கொடுத்தார். இந்நிலையில் அந்த புகாரின் அடிப்படையில் அந்த 12 போ் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கை இன்று எடுத்த உயா்நீதிமன்ற மதுரை கிளை, கொடி காட்டிய புகாரில் இருந்த திமுக மாவட்ட செயலாளர் திவாகரன் உள்ளிட்ட 12 பேருக்கு முன்ஜாமீன் வழங்கியது உத்தரவிட்டுள்ளது. 

Next Story