திருப்பதி அருகே நின்றிருந்த வேன் மீது கார் மோதல்; 5 பேர் பலி


திருப்பதி அருகே நின்றிருந்த வேன் மீது கார் மோதல்; 5 பேர் பலி
x
தினத்தந்தி 20 May 2018 5:01 AM GMT (Updated: 20 May 2018 5:01 AM GMT)

திருப்பதி அருகே நின்றிருந்த வேன் மீது கார் மோதியதில் 5 பேர் பலியாகி உள்ளனர்.

திருப்பதி,

திருப்பதியில் இருந்து மகாராஷ்டிரா நோக்கி சென்ற கார் ஒன்று மாமண்டூர் பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வேன் மீது மோதி விபத்திற்குள்ளானது.

இந்த சம்பவத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் பலியாகினர்.  3 பேர் படுகாயம் அடைந்தனர்.  அவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.  காரில் பயணம் செய்தவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.

Next Story