ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் - குமாரசாமி பேட்டி
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என குமாரசாமி கூறியுள்ளார். #Kumaraswamy
திருச்சி,
கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் கூட்டணியுடன் புதிய ஆட்சி தொடங்க உள்ளது. குமாரசாமி வரும் புதன் கிழமை முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். பெங்களூருவில் இருந்து தனி விமானத்தில் திருச்சி வந்த குமாரசாமி இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வழிபாடு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்-அமைச்சர் பதவி கொடுப்பது தொடர்பாக இப்போது எதுவும் செய்ய முடியாது, பதவி ஏற்பு விழாவில் கலந்துக்கொள்ள திமுக செயல்தலைவர் முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. கர்நாடகாவில் 5 ஆண்டு பதவி காலத்தை காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் பூர்த்தி செய்யும் என்றார்.
காவிரி விவகாரம் தொடர்பாக குமாரசாமி பேசுகையில், இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் காவிரி பிரச்னைக்கு தீர்வு காண்பது நல்லது. மூன்று ஆண்டுகளாக போதிய மழையின்மை காரணமாக கர்நாடக அணைகளில் தண்ணீர் கிடையாது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் அருளால் இந்த ஆண்டு நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பினால் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்படும் என கூறியுள்ளார்.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதித்து கர்நாடக அரசு செயல்படும் எனவும் குறிப்பிட்டார்.
Related Tags :
Next Story