தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு: ஆட்சியர்


தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு: ஆட்சியர்
x
தினத்தந்தி 21 May 2018 10:03 PM IST (Updated: 21 May 2018 10:03 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 144 தடை விதித்து ஆட்சியர் உத்தரவிட்டார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 144 தடை விதித்து ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.

தூத்துக்குடி மக்கள் கூட்டமைப்பு, அரசியல் கட்சிகள், வணிகர் சங்கம், மீனவர் சங்கம் சார்பில் நாளை போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மூடவலியுறுத்தி நாளை நடைபெறும் போராட்டத்தை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம், சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று இரவு 10 மணி முதல் நாளை மறுநாள் காலை 8 மணி வரை 144 தடை விதித்து ஆட்சியர் வெங்கடேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story