தூத்துக்குடி சம்பவம் இன்னொரு ஈழம் உருவாகக் கூடாது வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி மீது வழக்கு


தூத்துக்குடி சம்பவம் இன்னொரு ஈழம் உருவாகக் கூடாது வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி மீது வழக்கு
x
தினத்தந்தி 23 May 2018 12:25 PM GMT (Updated: 23 May 2018 12:25 PM GMT)

தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். #ThoothukudiShooting #SterliteProtest #sterlitekillsthoothukudi

சென்னை

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில்  பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 30க்கும்  மேற்பட்டோர் படுகாயங்களுடன் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, அண்ணாநகர் பகுதியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அருகே இன்று காலை போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மீண்டும் மோதல் வெடித்தது.

போராட்டம் வலுவடைந்ததால், போலீசார் கண்ணீர் புகை வீசியும், ரப்பர் குண்டுகளை பயன்படுத்தி துப்பாக்கிகளால் சுட்டும் போராட்டக்காரர்களை விரட்டி அடித்தனர். நிலைமை எல்லைமீறி போனதால் போலீசார் இன்றும் துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில், காளியப்பன் என்ற 22 வயது வாலிபர் உயிரிழந்ததை தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல சீரியல் நடிகை ஒருவர் சமூகவலைத்தளம் ஒன்றில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.  அதில், இலங்கையில் என்ன நடந்ததோ, அதே தான் தமிழ் நாட்டிலும் நடக்கும் எனவும், தமிழகத்தில் போலீசார் நடத்திய துப்பக்கிச் சூட்டு சம்பவத்தின் காரணமாக அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர். 

இதன் மூலம் அவர்கள் தமிழர்களை தீவிரவாதியாக்க முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இது தற்செயலாக நடந்தது போன்று இல்லை. முற்றிலும் திட்டமிட்டு நடத்தப்பட்டது போன்று உள்ளது. இங்கு இன்னும் ஒரு ஈழம் உருவாகிவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

Next Story