போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அராஜக போக்கு ஜி.கே.வாசன் கண்டனம்


போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அராஜக போக்கு ஜி.கே.வாசன் கண்டனம்
x
தினத்தந்தி 23 May 2018 11:10 PM IST (Updated: 23 May 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது அராஜக போக்கு என்று ஜி.கே.வாசன் கூறினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்து தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்  நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 100–வது நாள் போராட்டம் நடக்கிறது என்றால் அதன் முக்கியத்துவம், அவசியம், மக்களின் நிலையை அறிந்து செயல்படாமல், காவல் துறை துப்பாக்கி சூடு நடத்தியது தேவையற்றது. இது அராஜக போக்கு. இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஸ்டெர்லைட் ஆலை மூடக்கூடிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளது. மக்கள் விரும்பாத எந்த திட்டத்தையும் தமிழக அரசோ, மத்திய அரசோ மக்கள் மீது திணிக்க முடியாது. இதற்கு துப்பாக்கி சூடு சம்பவம் முற்றுப்புள்ளியாக அமையும் என்று நம்புகிறேன்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார். 

Next Story