ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தி.மு.க. மீது டாக்டர் ராமதாஸ் சாடல்


ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்: தி.மு.க. மீது டாக்டர் ராமதாஸ் சாடல்
x
தினத்தந்தி 23 May 2018 7:00 PM GMT (Updated: 23 May 2018 5:44 PM GMT)

‘ஸ்டெர்லைட்’ ஆலை விவகாரத்தில் தி.மு.க.வை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார்.

சென்னை, 

‘ஸ்டெர்லைட்’ ஆலை விவகாரத்தில் தி.மு.க.வை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடி உள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தமிழில் கருத்து பதிவிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது:–

நடிப்பு சுதேசிகள். ஸ்டெர்லைட் ஆலையில் தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவனுக்கு 600 சரக்குந்து(லாரிகள்) ஓடுகின்றனவாம். கோடிகள் கொட்டுகின்றனவாம்.

‘ஸ்டெர்லைட்’ விரிவாக்கத்துக்கு தி.மு.க. அனுமதி அளிக்குமாம். ஆனாலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடுவார்களாம். என்னவொரு நடிப்பு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story