தூத்துக்குடிக்கு சென்று விரைவில் மக்களை சந்திப்போம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி


தூத்துக்குடிக்கு சென்று விரைவில் மக்களை சந்திப்போம் - அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 24 May 2018 12:06 PM IST (Updated: 24 May 2018 12:06 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடிக்கு சென்று விரைவில் மக்களை சந்திப்போம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். #Jayakumar #AIADMK #SterliteProtest

சென்னை

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 37-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு  அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் பின்னர் அமைச்சர்  ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

 அமைச்சரிடம், தூத்துக்குடி மக்களை ஏன் சந்திக்கவில்லை என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் விரைவில் சந்திப்போம் என்றார். எதிர்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவராக இருக்கக் கூடாது. தூத்துக்குடி விவகாரம் துரதிருஷ்டவசமானது; அதில் அரசியல் பார்க்கக்கூடாது 

வைகோ தனித்தமிழ்நாடு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார் என்றால் அது குறித்து மத்திய அரசுதான் கருத்தில் எடுத்துக் கொள்ளும் . இணையதளம் முடக்கம்  விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் தமிழக அரசு செயல்படும் என்றார்.  ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைபாடு. மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு என்றும் அனுமதி கிடையாது. என கூறினார்.

Next Story