இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் - மு.க. ஸ்டாலின்


இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் - மு.க. ஸ்டாலின்
x
தினத்தந்தி 24 May 2018 9:56 PM IST (Updated: 24 May 2018 9:56 PM IST)
t-max-icont-min-icon

இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை, 

இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என முக ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். 

ஸ்டெர்லைட் ஆலையை மூடுவோம் என்ற ஆட்சியரின் அறிவிப்பை நம்பி ஏமாந்துவிடக் கூடாது. உயிரிழந்தவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இணையதள சேவை முடங்கியதால் 3 மாவட்டங்கள் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளது போல் உள்ளன. 

தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 3 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்தை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும். தமிழ்நாட்டை ஏதோ கலவர பூமி போல் வெளி மாநிலங்களுக்கு சித்தரித்து சிறுமைப்படுத்தாதீர் என முக ஸ்டாலின் கூறிஉள்ளார். 

இணையதள சேவை முடக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதி, இறக்குமதி தொழில்கள் மற்றும் தூத்துக்குடி துறைமுகப் பணிகள் தேக்கமடைந்துள்ளன. ஆன்லைன் பணப்பரிமாற்றம் முழுமையாக தடைபட்டு வணிக நிறுவனங்கள் செயலிழந்து நிற்கின்றன எனவும் குறிப்பிட்டு உள்ளார். 

இதற்கிடையே மு.க.ஸ்டாலின் உட்பட 25 திமுக எம்எல்ஏக்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், அதிகாரிகளின் உத்தரவை அவமதித்தல் ஆகிய 
இரு பிரிவுகளின் கீழ் கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 


Next Story