திமுக நடத்துவது நாடகம் என்றால் அதிமுக நடத்துவது கபடநாடகம் முதல்வர் பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் பதில்
திமுக நடத்துவது நாடகம் என்றால் அதிமுக நடத்துவது கபடநாடகம் என முதலமைச்சருக்கு ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். #ThoothukudiShooting #MKStalin #EdapadiPalanisamy
காஞ்சிபுரம்
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தி.மு.க நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
முதல் அமைச்சரை சந்திக்க செல்ல வில்லை அவரிடம் கோரிக்கை வைக்க செல்லவில்லை. முதலமைச்சர் அலுவலக அறையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினோம். எங்களை கைது செய்தால், அடைக்க சிறைகள் இல்லை .சிறை செல்வதை பற்றி திமுகவினருக்கு கவலை இல்லை. திமுக நடத்துவது நாடகம் என்றால் அதிமுக நடத்துவது கபடநாடகம்.
தமிழகம் போராட்டக்களமாக மாறியுள்ளது. ஆலையை மூட நடவடிக்கை எடுப்பதாக கூறும் அரசு முன்பே பேசியிருந்தால் உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.
144 தடை உத்தரவு தமக்கு பொருந்தாது என்பது கூட தெரியாமல் முதல்வர் உள்ளார் என திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்சியில் இருப்பவர்கள் விரைவில் எந்தெந்த நிலையில் இருப்பார்கள் என்பதை நாடு பார்க்கும் இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story