2020 ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும் - முதலமைச்சர் பழனிசாமி


2020 ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும் - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 25 May 2018 2:11 PM IST (Updated: 25 May 2018 2:18 PM IST)
t-max-icont-min-icon

சென்னை சென்ட்ரல் முதல் நேரு பூங்கா வரையிலுமான சுரங்கப்பாதை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை முதலமைச்சர் பழனிசாமி தொடங்கி வைத்தார். #MetroTrain #EdappadiPalanisamy

சென்னை

சென்னை நேரு பூங்கா - சென்ட்ரல், சின்னமலை-ஏ.ஜி., டிஎம்எஸ் இடையே மெட்ரோ ரயில் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். 

சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரையில் 28 கி.மீ. தூரம் பணிகள் முடிந்து ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. 

இதன் அடுத்தகட்டமாக நேரு பூங்கா, எழும்பூர், சென்ட்ரல் மற்றும் சின்னமலை – டிஎம்எஸ் வழித்தடத்தில் பணிகள் முடிக்கப்பட்டு 2 மாதங்களாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. 

இந்த நிலையில் சென்னை சென்ட்ரல் - நேரு பூங்கா, சின்னமலை - டிஎம்எஸ் இடையிலான மெட்ரோ ரயில்சேவை தொடக்க விழா இன்று மதியம் 12.30 மணிக்கு எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில், முதல்வர் பழனிசாமி பங்கேற்று, மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தார். 

முதலமைச்சர் பழனிசாமி பேசும் போது 

 போக்குவரத்தில் அதி நவீன வளர்ச்சிதான் மெட்ரோ ரயில் - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு.. 2020 ஜூன் மாதத்திற்குள் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடையும்  என கூறினார்

சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரையிலான இந்த வழித்தடத்தில் சைதாப்பேட்டை, நந்தனம், தேனாம்பேட்டை, டி.எம்.எஸ். ஆகிய 4 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து சின்னமலை - டி.எம்.எஸ். இடையிலான மெட்ரோ ரயில் போக்குவரத்தும் இன்று தொடங்குகியது. 

இதன்மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு பயணிகள் நேரடியாக சென்று வரலாம். அதேநேரத்தில் சைதாப்பேட்டை மார்கமாக செல்ல விரும்பும் பயணிகள், விமான நிலையத்தில் இருந்து ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்க வேண்டும். பின்பு, டி.எம்.எஸ். மார்கமாக செல்லும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய வேண்டும். 

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் 0 - 2 கி.மீ தூரத்துக்கு ரூ.10, 2 - 4 கி.மீ ரூ.20, 4 - 6 கி.மீ ரூ.30, 6 - 10 கி.மீ ரூ.40, 10 - 15 கி.மீ ரூ.50, 15 - 20 கி.மீ ரூ.60, 20 - 50 கி.மீ ரூ.70 என ஏற்கெனவே கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே சென்ட்ரலில் இருந்து விமான நிலையத்துக்கு கட்டணமாக ரூ.70 நிர்ணயிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.



சுரங்கப்பாதையில் ரயில் இயக்கப்பட உள்ளதற்கு இந்தியாவிற்கான ஜப்பான் தூதர் பாராட்டு தெரிவித்துள்ளார். மெட்ரோ ரயில் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டை குறைக்க மெட்ரோ சேவை உதவும் என அவர் கூறியுள்ளார். 

Next Story