சேலம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி


சேலம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
x
தினத்தந்தி 1 Sept 2018 11:22 AM IST (Updated: 1 Sept 2018 11:22 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கப்டும் என சேலம் அனுப்பூரில் பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து முதலமைச்சர் பழனிசாமி பேசினார். #EdappadiPalaniswami #ADMK

சேலம்

சேலம் மாவட்டம் எடப்பாடியில் ரூ.30 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும் அங்குள்ள உடற்பயிற்சி கூடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார். உடற்பயிற்சி கூடத்தில் முதல்வர் உடற்பயிற்சி செய்து பார்த்தார். 

நானும் விவசாயி தான், விவசாயம் எவ்வளவு கடினமான தொழில் என்பதையும், விவசாயிகள் வாழ்வில் எவ்வளவு துன்பம் என்பதையும் நான் நன்கு அறிவேன்.  விவசாயிகள் நலனை மேம்படுத்த அரசு எப்போதும் துணை நிற்கும்.கிராமங்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சேலம் மாவட்டம் முன்னோடி மாவட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்கபடும் என கூறினார்.

Next Story