சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.82.24க்கு விற்பனை


சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு ரூ.82.24க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Sep 2018 1:36 AM GMT (Updated: 3 Sep 2018 1:36 AM GMT)

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு இன்று ரூ.82.24க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்து கொள்ள மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.  கடந்த மே மாதத்தில் இவற்றின் விலை உயர்ந்து கொண்டே சென்றது.   பெட்ரோல் விலை தொடர்ந்து உயர்ந்த நிலையில் அது வாகன ஓட்டிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து விலை குறைப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டது.  பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது.  இதனால் விற்பனை விலை சற்று குறைந்தது.  இந்த நிலையில், கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது.

இந்த நிலையில், சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.81.92க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு ரூ.74.77க்கும் விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றிற்கு நேற்றைய விலையை விட 32 பைசாக்கள் உயர்ந்து ரூ. ரூ.82.24க்கும் மற்றும் டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 42 பைசாக்கள் உயர்ந்து ரூ.75.19க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story