திருச்சி: அதிகாரியின் கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு


திருச்சி: அதிகாரியின் கார் மோதி 3 பெண்கள் உயிரிழப்பு
x
தினத்தந்தி 3 Sep 2018 2:38 PM GMT (Updated: 2018-09-03T20:09:49+05:30)

திருச்சி அருகே அதிகாரியின் கார் மோதி 3 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

திருச்சி,

திருச்சி அருகே உள்ள முக்கொம்பு சிறுகமணி என்ற பகுதியில் பொதுப்பணித்துறை அதிகாரியின் கார் மோதி 3 பெண் தொழிலாளர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிறுகமணி அக்ரஹாரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் மீது கார் மோதியதாகவும், இந்த பயங்கர விபத்தில், 3 பெண்கள் பலியானதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

விபத்தை தொடர்ந்து பொதுப்பணித்துறையின் உதவி செயற்பொறியாளர் தயாளுகுமார் காரைவிட்டு தப்பி ஓட்டம் பிடித்தார் எனவும், காரை இயக்கிய தயாளுகுமார் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Next Story