காங்கிரஸ் ஆலோனை கூட்டத்தில் மோதல்: 7 பேரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கினார் திருநாவுக்கரசர்
காங்கிரஸ் ஆலோனை கூட்டத்தில் நடந்த மோதல் காரணமாக 7 பேரை கட்சியிலிருந்து திருநாவுக்கரசர் அதிரடியாக நீக்கியுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் முக்கிய ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் தலைமை தாங்கிய இந்த கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தமிழக பொறுப்பாளர்கள் சென்னா ரெட்டி, சஞ்சய்தத் ஆகியோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் அக்கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். பாராளுமன்ற தேர்தல் பிரசாரம், மாவட்ட வாரியாக பூத் கமிட்டி அமைப்பது, ரபேல் போர் விமான ஊழல் விவகாரம் ஆகியவை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எதிர்வரும் தேர்தல்களுக்கான ஏற்பாடுகள், வெற்றிபெறும் வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து நடைபெற்றுக் கொண்டிருந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கு பெற அனுமதிக்குமாறு 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் நுழைவு வாயிலில் இருந்தவர்களிடம் கேட்டனர். அழைப்பு உள்ளவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி இல்லை எனத் திட்டவட்டமாக கூறப்பட்டதால், இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டு, கைகலப்பு உருவாகும் சூழல் நிலவியதால் அங்கு பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், இரு பிரிவினரையும் சமாதானம் செய்து வைத்தார்.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடந்த இந்த மோதல் சம்பவம் காரணமாக திருநாவுக்கரசர், 7 பேரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Tags :
Next Story