ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

ஹைட்ரோ கார்பன் கடலுக்கு அடியில் தான் எடுக்கப்படுகிறது. அது நிலப்பரப்பை பாதிக்காது என தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
ஆலந்தூர்,
சென்னை விமான நிலையத்தில் தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:- தாமிரபரணியில் மகா புஷ்கரம் விழாவுக்கு தமிழக அரசு இன்னும் கூடுதல் நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும். தாமிரபரணி குறுக்குத்துறை மற்றும் தைப்பூச படித்துறைகளில் மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் அனுமதி மறுத்து இருப்பது சரியான நடவடிக்கை அல்ல. இது வேண்டும் என்றே விழாவை முடக்குவது போல் உள்ளது. ஆன்மிக விழாவை நடத்துபவர்கள் அச்சுறுத்தப்படுகின்றனர்.
ஆந்திராவில் புஷ்கரம் விழா நடந்தபோது அந்த மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அடிக்கடி அங்கு சென்றார். மத்தியபிரதேசம், உத்தரபிரதேச மாநிலங்களில் அரசு விழாவாக நடத்தப்பட்டது. 140 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாமிரபரணி நதியில் நடக்கும் விழாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு விழாவாக அறிவித்து அதில் அவர் பங்கேற்க வேண்டும்.
மீத்தேன் திட்டத்துக்கு அனுமதி வழங்கிய தி.மு.க., ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எடுக்கும் போது கடலில் எடுங்கள், ஏன் நிலத்தில் எடுக்கிறீர்கள் என்றனர். ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கடலுக்கு அடியில் எடுக்க தான் ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் மட்டுமின்றி நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டம் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் கடலுக்கு அடியில் எடுக்கப்படுவதால் கவலைப்பட தேவையில்லை. அது எந்தவிதத்திலும் நிலப்பரப்பை பாதிக்காது.
எதிர்காலத்தில் எரிசக்தியின் தேவை அதிகமாக இருக்கிறது. மற்ற மாநிலங்களில் இதை வளர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் போது தமிழகத்தில் மட்டும் கிளர்ச்சி செய்ய ஒரு வாய்ப்பு கிடைத்துவிட்டதாக எடுத்துக் கொள்வது தவறு. மக்களுக்கு ஆபத்து வருவதாக இருந்தால் பா.ஜனதா கட்சி அனுமதிக்காது. மக்கள் மீது எங்களுக்கும் அக்கறை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story