பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம் ! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி


பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து இறங்கு முகம் ! வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 2 Nov 2018 6:34 AM IST (Updated: 2 Nov 2018 6:34 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் விலை லிட்டருக்கு 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. டீசல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.


சென்னை,

பெட்ரோல்-டீசல் விலை தினசரி நிர்ணயம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்தது. ஒரு கட்டத்தில் வரலாறு காணாத விலை உயர்வை பெட்ரோல்-டீசல் சந்தித்தன.

இந்த நிலையில் தொடர் உச்சத்தில் இருந்து வந்த பெட்ரோல்-டீசல் விலை கடந்த 2 வாரங்களாகவே இறங்கு முகத்தில் இருக்கிறது. கடந்த 18-ந் தேதியில் இருந்து பெட்ரோல்-டீசல் விலை குறைந்து கொண்டே வருகிறது. கடந்த இரு வாரங்களாக தொடர்ந்து  பெட்ரோல், டீசல் விலை குறைந்து கொண்டே வந்தது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை அளித்தது. நேற்று பெட்ரோல் விலை 19 காசுகள் குறைக்கப்பட்டது. டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டது. 

இந்த நிலையில், இன்று பெட்ரோல் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.82.26 -க்கு விற்பனை செய்யப்படுகின்றது. டீசல் விலை 15 காசுகள் குறைக்கப்பட்டு  ரூ.77.85-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.3.84-ம், டீசல் விலை ரூ.2.19-ம் குறைந்துள்ளது.

Next Story