காதலனை 5 ஆண்டுகளாக ஏமாற்றி ரூ.10 லட்சம், 13 சவரன் நகை சுருட்டிய இளம்பெண்


காதலனை 5 ஆண்டுகளாக ஏமாற்றி ரூ.10 லட்சம், 13 சவரன் நகை சுருட்டிய இளம்பெண்
x
தினத்தந்தி 18 Nov 2018 4:01 PM IST (Updated: 18 Nov 2018 4:01 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்டம் வள்ளியூரில் காதலனை ஏமாற்றி 10 லட்சம் ரூபாய் பறித்த இளம்பெண் கணவருடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை,

வள்ளியூரை சேர்ந்த உமா என்பவர், நாகர்கோவிலில் இருசக்கர வாகன ஷோரூமில் வேலை பார்த்தபோது, சோதிரி ராஜா என்பவரை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். 

இந்நிலையில், இரண்டு மாதத்திற்கு முன்பு, தளபதி சமுத்திரத்தை சேர்ந்த சிவா என்பவரை உமா திருமணம் செய்துள்ளார். இதையடுத்து, உமாவிடம் கொடுத்த ஏடிஎம் கார்டு மற்றும் 13 சவரன் நகையை சோதிரி ராஜா திருப்பி கேட்டுள்ளார்.

அவரை உமாவின் கணவர் சிவா மிரட்டியதால் ராஜா அளித்த புகாரின் பேரில் புதுமண தம்பதியான உமா, சிவா இருவரையும் போலீசார் கைது செய்தனர். 5 ஆண்டுகளாக காதலித்த காதலனை காதலியே ஏமாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
1 More update

Next Story