சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் குறைந்து விற்பனையாகி வருகிறது.
சென்னை,
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினசரி நிர்ணயம் என்ற நிலைக்கு வந்த பிறகு, ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து வந்தது. கடந்த 2 மாதங்களுக்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் 18ந்தேதி பெட்ரோல் விலை குறைந்து விற்பனையானது. அதன்பின் தொடர்ந்து இவற்றின் விலை குறைய தொடங்கியது. இதனால் ரூ.85க்கும் கூடுதலாக விற்கப்பட்டு வந்த பெட்ரோல் விலை ரூ.75க்கு குறைவாக விற்கப்படுகிறது. இதேபோன்று டீசல் விலையும் சரிந்து உள்ளது.
இந்த நிலையில், சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையை விட லிட்டர் ஒன்றுக்கு 32 காசுகள் குறைந்து ரூ.74.94க்கு விற்கப்படுகிறது. இதேபோன்று டீசல் விலை 40 காசுகள் குறைந்து ரூ.71.12க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Related Tags :
Next Story