மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்
மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவதற்கு புதிய கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை விதித்து உள்ளது.
சென்னை,
பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மழையால் பாதிக்கப்படும் பகுதிக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும் . மழை பெய்தால், உடனே விடுமுறை அறிவிக்கக் கூடாது. மழையால் வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டால் மட்டுமே விடுமுறை விட வேண்டும். மழையை பொறுத்து பள்ளி தொடங்குவதற்கு 3 மணி நேரத்திற்கு முன் விடுமுறை அறிவிக்க வேண்டும்.
விடுமுறை விடப்பட்டால் அதை ஈடு செய்ய சனிக்கிழமை வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. விடுமுறை காரணமாக பாடத்திட்டம் எதுவும் பாதிக்காத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்.
மழை காரணமாக கல்வி மாவட்ட அளவில், ஊராட்சி அளவில் மட்டுமே விடுமுறை விடலாம்.
திருவிழா போன்றவற்றிற்கு உள்ளூர் விடுமுறை விடும் போது ஈடு செய்யும் பணி நாளையும் சேர்த்து அறிவிக்க வேண்டும்.
இந்த புதிய விதிமுறைகளை அமல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளார்.
Related Tags :
Next Story