மாநில செய்திகள்

ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுகவினர் மரியாதை + "||" + In the Jayalalitha memorial, TTV Dinakaran headed

ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுகவினர் மரியாதை

ஜெயலலிதா நினைவிடத்தில் டி.டி.வி. தினகரன் தலைமையில் அமமுகவினர் மரியாதை
ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது நினைவிடத்தில் தினகரன் தனது ஆதரவாளர்களுடன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
சென்னை,

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமையில் அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து ஜெயலலிதா நினைவிடம் நோக்கி அமைதி பேரணி நடந்தது.

திறந்த ஜீப்பில் தினகரன் தலைமையில் அமைதி ஊர்வலம் மெரீனா கடற்கரை நோக்கி புறப்பட்டது. ஜீப்பில் தினகரனுடன் நிர்வாகிகள் அன்பழகன், பழனியப்பன், பி.வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன், செந்தமிழன் ஆகியோர் சென்றனர்.

அமைதி பேரணி மெரீனாவில் நிறைவடைந்ததும், தொண்டர்களுடன் டி.டி.வி. தினகரன் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேச்சு வார்த்தை நடக்கிறது -டிடிவி தினகரன்
மக்களவை தேர்தலில் சில கட்சிகளுடன் கூட்டணி பற்றி பேசிவருவதாக டிடிவி.தினகரன் தெரிவித்துள்ளார்.
2. ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை - டி.டி.வி. தினகரன்
ஃப்ளாப் மூவிக்கான டிரெய்லர் போன்று இருந்தது கவர்னர் பன்வாரிலாலின் உரை என டி.டி.வி. தினகரன் கூறி உள்ளார்.
3. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு - டிடிவி தினகரன்
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்தது சிறுபிள்ளைத்தனமான முடிவு என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
4. என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது - டிடிவி தினகரன்
என்னுடைய வளர்ச்சியை கண்டு ஆளுங்கட்சியை தாண்டி எதிர்க்கட்சி பயப்படுகிறது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
5. மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு
நாமக்கல் மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.