துணை கலெக்டர், டி.எஸ்.பி.க்கள் உள்பட 85 காலி பணியிடங்கள்: குரூப்-1 நேர்முக தேர்வுக்கு 176 பேர் தகுதி மனிதநேய மையத்தில் படித்த 33 மாணவர்கள் தேர்வு
துணை கலெக்டர், டி.எஸ்.பி.க்கள் உள்பட 85 காலி பணியிடங்களுக்கு நடந்த குரூப்-1 தேர்வில், 176 பேர் நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். இதில் மனிதநேய மையத்தில் படித்த 33 மாணவர்களும் அடங்குவார்கள்.
சென்னை,
துணை கலெக்டர் (29), போலீஸ் டி.எஸ்.பி.க்கள் (34), வணிக வரித்துறை உதவி கமிஷனர் (8), மாவட்டப் பதிவாளர் (1), மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி (5), தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் மாவட்ட அதிகாரி (8) ஆகிய பதவிகளுக்கான 85 மொத்த காலிப்பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு குறித்த அறிவிப்பை கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 11-ந்தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டது.
இதையடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ந்தேதி முதல் நிலை தேர்வும், அக்டோபர் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை முதன்மை எழுத்து தேர்வும் நடந்தது.
எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான பிற விதிகளின் அடிப்படையில் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக 176 பேர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் www.tnpsc.gov.in எனும் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
சான்றிதழ் சர்பார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை வருகிற 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடைபெற உள்ளது. குரூப்-1 நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றவர்களின் 70 சதவீதம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப்-1 நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றவர்களில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி நடத்தி வரும் மனிதநேய மையத்தில் படித்த 33 மாணவர்களும் அடங்குவர். அந்தவகையில் மனிதநேய மையத்தில் படித்த 6 ஆண்களும், 27 பெண்களும் தேர்வாகி இருக்கிறார்கள்.
இதுகுறித்து சைதை துரைசாமி கூறுகையில், “எங்கள் மையத்தில் படித்த பெரும்பாலானோர் இன்று அரசு பணிகளில் அங்கம் வகிக்கின்றனர். குறிப்பாக ஏராளமான பெண்கள் பல்வேறு அரசு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு, தற்போது அதிகாரிகளாக சிறப்பாக பணியாற்றி கொண்டிருக்கின்றனர்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
சைதை துரைசாமி மேலும் இதுபற்றி கூறியதாவது:-
குரூப்-1 முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் நேர்முக தேர்வு பயிற்சி வகுப்புகள் வருகிற 3-ந்தேதி முதல் இலவசமாக நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகள் இணையதள முகவரியிலோ அல்லது தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் முதன்மை தேர்வுக் கான நுழைவுச்சீட்டு ஆகியவற் றுடன் நேரிலோ வந்து பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044- 24358373, 24330095 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.
இந்த நேர்முக தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளுக்கும், நேர்முகத்தேர்வுக்கு தேவையான அனைத்து வசதிகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story