சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.1-க்கு விற்று விவசாயிகள் நூதன போராட்டம்
கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கோவை,
இந்த கூட்டத்தின் போது தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிசாமி தலைமையில் ஏராளமான விவசாயிகள் 3 மூட்டைகளில் சின்ன வெங்காயம் கொண்டு வந்து, கலெக்டர் அலுவலகம் முன் வைத்தனர். பின்னர் அவர்கள், அந்த சின்ன வெங்காயத்தை கிலோ ரூ.1-க்கு விற்பனை செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் ஒரு பொருள் வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போன்று ஒரு கிலோ சின்னவெங்காயம் வாங்கினால், மற்றொரு கிலோ சின்ன வெங்காயம் இலவசம் என்று அறிவித்தனர். இதனால் சின்ன வெங்காயத்தை பலரும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். சின்ன வெங்காயம் விற்பனை செய்ததில் ரூ.319 ரொக்கம் கிடைத்தது. இதனை விவசாயிகள், பிரதம மந்திரியின் பொது நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தனர். சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடு கோரி இந்த போராட்டம் நடந்தது.
இதையடுத்து விவசாயிகள் கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோவையில் இந்த ஆண்டு சின்ன வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் சின்னவெங்காயம் கிலோ ரூ.120 முதல் ரூ.145 வரை விலை போனது. ஆனால் தற்போது கிலோ ரூ.7 முதல் ரூ.15 வரை விற்கப்படுகிறது. ஒரு ஏக்கர் சின்ன வெங்காயம் பயிரிட ரூ.85 ஆயிரம் வரை செலவு ஆகிறது. தற்போது ஏற்பட்டுள்ள விலை வீழ்ச்சியால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story