திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு - வைகோ


திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு - வைகோ
x
தினத்தந்தி 1 Jan 2019 1:57 PM IST (Updated: 1 Jan 2019 1:57 PM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளருக்கு மதிமுக ஆதரவு அளிக்குமென அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:-

திருவாரூர் இடைத்தேர்தலில் திமுகவின் வெற்றிக்காக மதிமுக பாடுபடும் . 2004-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை போல் தற்போதும் திமுக கூட்டணி வெற்றி பெறும் . நாளை கூடும் சட்டமன்ற கூட்டத்தில் ஸ்டெர்லைட் குறித்து கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் முன் மொழிந்த அணுகுமுறை சரிதான்.  மாநில கட்சிகள் எதுவும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளை கூட பெற முடியாத சூழலில் காங்கிரஸ் கட்சி தான் அதிக இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளது. இதனை மனதில் கொண்டே ராகுலை, மு.க.ஸ்டாலின் பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்திருக்கலாம். அதில் தவறு ஏதும் இல்லை. 

பிரதமர் மோடி தமிழகம் வந்தால் மதிமுக சார்பில் கறுப்புக்கொடி காட்டப்படும்.

ஜெயலலிதா மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுக்கு எதிராக கூறப்படும் புகார்கள் நியாயமானவை இல்லை என்று வைகோ கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள நியாயமான அதிகாரிகளில் ராதாகிருஷ்ணன் முக்கியமானவர் என்றும் அவர் தெரிவித்தார்.

Next Story