திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு
திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
திருவாரூர்,
தி.மு.க. முன்னாள் தலைவர் கருணாநிதி மறைவால் காலியாக உள்ள திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அதன்படி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் 3ந்தேதி தொடங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் 10-ந் தேதி. வேட்பு மனு வாபஸ் பெற 14-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து 28-ந் தேதி ஓட்டுப்பதிவும், 31-ந் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்று முடிவு அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், திருவாரூர் இடைத்தேர்தல் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரிய மனு மீது இன்று விசாரணை நடந்தது. இதில் அறிவிப்பாணைக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி தமிழக தலைமை செயலாளர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
Related Tags :
Next Story