சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிறந்த நாள் கொண்டாடி விட்டு இளம் காவலர் தற்கொலை
சென்னை கீழ்ப்பாக்கத்தில் பிறந்த நாள் கொண்டாடி விட்டு இளம் காவலர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 26). சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆயுதப்படை ஐ.ஜி. அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வந்துள்ளார். இன்று தனது பிறந்த நாளை நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அதன்பின், அதிகாலையில் அவர் தனது பணி உபயோகத்திற்காக வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காவலர் மணிகண்டனின் உடல், பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. அவர் குடும்ப விவகாரத்தில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது பற்றி உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story