யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது அது ஒரு ரகசியம் - பன்னீர்செல்வம் பேட்டி
யாருடன் கூட்டணி பேசி வருகிறோம் என்பதை சொல்ல முடியாது அது ஒரு ரகசியம் என துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை திருவான்மியூரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடைபெறும் பேச்சுவார்த்தை பரம ரகசியம். ரகசிய முடிச்சுகள் அவிழ்க்கப்படும் போது கூட்டணி பற்றி நிச்சயம் அறிவிக்கப்படும்.
அதிமுகவில் எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ஆனால் முடிவை ஒன்று சேர்ந்து அறிவிப்போம். எங்களுடன் ஒத்தக்கருத்து இருக்கும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும்.
தோழமை கட்சிகள், தேசிய கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேசிய கட்சிகளாக இருந்தாலும், மாநில கட்சிகளாக இருந்தாலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி அமையும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story