பாராளுமன்ற தேர்தல்: ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார்
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் விருப்ப மனு பெற்றார்.
சென்னை
பாராளுமன்ற தேர்தலையொட்டி பிரதான கட்சியான அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் ஏற்கனவே குழு அமைத்துள்ளது. ஆனால் இதுவரையில் அ.தி.மு.க. கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக எந்த கட்சியும் இணையவில்லை. பா.ம.க., தே.மு.தி.க., பா.ஜ.க., த.மா.கா. ஆகிய கட்சிகளுடன் கூட்டணிக்கான ரகசிய பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. நடத்தி வருகிறது.
40 பாராளுமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு வினியோயகம் இன்று தொடங்கியது.
சென்னையில் விருப்ப மனு வினியோகத்தை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமார் அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெற்றுச் சென்றார். இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் முக்கூர் சுப்பிரமணியன், கோகுலஇந்திரா, மாதவரம் மூர்த்தி, ஆர்.வி.எம்.கண்ணன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவகங்கை செந்தில்நாதன் உள்ளிட்டோர் விருப்பமனு விண்ணப்பங்களை வாங்கினர்.
Related Tags :
Next Story