தமிழகத்திற்கு 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் அறிவித்தது


தமிழகத்திற்கு 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் அறிவித்தது
x
தினத்தந்தி 5 Feb 2019 10:30 PM IST (Updated: 5 Feb 2019 10:30 PM IST)
t-max-icont-min-icon

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்திற்கு 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை,

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் 22 பேர் கொண்ட தேர்தல் குழுவை காங்கிரஸ் கட்சி இன்று நியமனம் செய்தது. இந்த தேர்தல் குழுவில் ப.சிதம்பரம், மணிசங்கர் ஐயர், கே.ஆர்.ராமசாமி, குஷ்பு உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவரது தலைமையில் 14 பேர் கொண்ட தேர்தல் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

பீட்டர் அல்போன்ஸ் தலைமையில் 35 பேர் கொண்ட ஊடக ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேர்தல் பிரச்சார குழு தலைவராக திருநாவுக்கரசர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் மற்றொரு செயல் தலைவராக மோகன் குமாரமங்கலம் நியமிக்கப்பட்டுள்ளார்.



Next Story