திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு


திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 26 Feb 2019 6:32 AM GMT (Updated: 26 Feb 2019 8:18 AM GMT)

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

சென்னை,

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் ஈஸ்வரன் இடையே தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.

கொங்கு நாடு மக்கள்  தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்  கூறியதாவது:-

திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு 1 தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற பணிபுரிவோம். 21 தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என கூறினார்.

Next Story