தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் -அமைச்சர் ஜெயக்குமார்


தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் -அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 26 Feb 2019 7:38 AM GMT (Updated: 2019-02-26T13:46:33+05:30)

தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

சென்னை

அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வந்துவிடக்கூடாது என சிலர் வேலைபார்த்து கொண்டிருக்கின்றனர்.  தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் சில, எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றன. தேமுதிகவுடன் எந்த பிரச்சினையும் இல்லை, பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது. தேமுதிக நிச்சயமாக அதிமுக கூட்டணிக்கு வரும் என 
அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Next Story