திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி - அமைச்சர் ஜெயக்குமார்
திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை- கொல்லம் இடையேயான தினசரி ரயில் சேவை துவக்க விழா, எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,
அதிமுக அரசு செயல்படுத்தும் மக்கள் நலத் திட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
கூட்டணிக்கு ஆள்பிடிக்கும் வேலையை திமுகதான் செய்து வருகிறது. அதிமுக அல்ல. மக்கள் நல திட்டங்களை எதிர்க்கும் திமுகவிற்கு மக்களே சரியான பாடம் புகட்டுவார்கள். திக்கு தெரியாமல் திசை மாறிய பறவை போல் திமுக கூட்டணி உள்ளது.
மக்கள் நலத்திட்டங்களை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பயன்பெறவே ரூ.2000 வழங்கப்படுகிறது.ஆனால் திமுக அதனை அரசியல் காழ்ப்புணச்சிக்காக எதிர்த்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
Related Tags :
Next Story